தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்பொழுது ஏகே 62 திரைப்படத்தில் விரைவில் நடிக்க இருக்கும் நிலையில் இதற்காக இயக்குனர் மகிழ் திருமேனியிடம் உலகப்பட சிடிகளை கொடுத்து பார்க்க சொல்லி வருவதாக புதிதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. இதனை அடுத்து இவருடைய நடிப்பில் கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாக சக்கை போடு போட்டது. இந்த படத்தினை எச் வினோத் இயக்கியிருந்த நிலையில் முதல் இரண்டு படங்கள் இல்லாத அளவிற்கு இந்த படம் அருமையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கூறப்பட்டது இவரும் தன்னுடைய முழு கதையை அஜித் மற்றும் லைகா நிறுவனத்திடம் கூற அந்த கதை பிடிக்காமல் போக பிறகு ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவனை நீக்கி உள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் 62 ஏகே திரைப்படத்தினை இதுவரையிலும் யார் இயக்கப் போகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராமல் இருந்து வரும் நிலையில் சமீப காலங்களாக மகிழ் திருமேனி தான் ஏகே 62 படத்தினை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தினை லைகா நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் ரஜினியின் அடுத்த படத்தினை இயக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அஜித்தை சந்தித்த இயக்குனர் மகிழ் திருமேனி கதை சொன்னதாகவும் அது அஜித்திற்கு பிடித்துப் போக மேலும் அதனை மெருகேற்ற வேண்டும் என்பதற்காக அஜீத் ஆக்சன் கலந்த உலக திரைப்படங்களின் சீடிகளை கொடுத்துள்ளாராம். மகிழ்திருமேனியும் தவிர்க்க முடியாமல் அந்த படங்களை பார்த்ததாகவும் ஆனால் அதில் இடம்பெறும் காட்சிகள் எடுப்பதில் மகிழ் திருமேனிக்கு விருப்பம் இல்லை எனவும் கூறப்படுகிறது.