சிவகார்த்திகேயன் வருகையால் “தீபாவளி ரேசில்” இருந்து பின்வாங்குகிறாரா அஜித்.? வெளியே கசிந்த உண்மை தகவல்.!

sivakarthikeyan
sivakarthikeyan

இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் வருகின்றனர் அந்த வகையில் நடிகர் அஜித்தின் 61-வது திரைப்படம் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளும் என கூறியது ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் படி தீபாவளி ரேஸில் அஜித்தின் 61வது திரைப்படம் இணைவது கேள்விக்குறியாக தெரிய வந்துள்ளது.

தீபாவளி ரேசில் தற்பொழுது கார்த்தியின் சர்தார் ஜெயம் ரவியின் இறைவன் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய படங்கள் இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் 61 படம் சூட்டிங் தொடங்கிய போது தீபாவளிக்கு இந்த படம் வெளிவரும்  என சொன்னது ஆனால் இது ஏன் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

என்ன காரணம் சிவகார்த்திகேயனை பார்த்து அஜித் பயப்படுகிறாரா என கேட்டுள்ளனர் இதற்கு பதிலளித்த வலைப்பேச்சு நண்பர் அந்தகன் கூறியது. அஜித் எந்த ஒரு நடிகருக்கும் பயப்படாதவர் அவர் இதுவரை ரஜினி கமலுடன் மோதி பார்த்து விட்டார் சிவகார்த்திகேயனை பார்த்து அஜித் பயப்பட மாட்டார்.

அஜித்தின் படம் தீபாவளிக்கு வெளிவராமல் தள்ளி போக  படப்பிடிப்பு தாமதமாகுவது தான்  காரணம் எனக் கூறி சில தகவல்களையும் பகிர்ந்தார். நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த வருடத்தில் இன்னொரு படத்தை கொடுக்க ஹெச் வினோத்துடன் மீண்டும் ஒரு முறை கைகோர்த்தார்.

தனது 61வது படத்தின் சூட்டிங் தற்போது வரை பாதி மட்டுமே முடிந்துள்ளது மீதியை எடுப்பதற்குள் தீபாவளியே வந்துவிடும் என்பதை பட குழுவும் அஜித்தும் நன்கு உணர்ந்துவிட்டனர். இதனால் படத்தை தீபாவளிக்கு பிறகு ஒரு நல்ல நாளில் ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்து உள்ளதாம்.

மேலும் பட குழுவும் கொஞ்சம் ஓய்வு எடுத்த பிறகு இரண்டாவது கட்ட ஷூட்டிங் எடுக்கலாம் என கூறிவிட்டதாம். அதனால்தான் நடிகர் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகள் பக்கம் பர்சனலாக ட்ரிப் செய்து உள்ளார் என கூறப்படுகிறது. இந்த ட்ரிப்பை முடித்துவிட்டு வந்தவுடன் படக்குழு உடன்  இணைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் நடிப்பார் என தெரிய வருகிறது.