பிரபல இயக்குனரின் முயற்சியினால் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தினை உருவாக்க வேண்டும் என மணிரத்தினம் 20 ஆண்டுகளாக தன்னுடைய கனவாக நினைத்து வந்துள்ளார். தற்பொழுது அந்தக் கனவு நினைவாகி உள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி அன்று இந்தியாவிலுள்ள ஏராளமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மேலும் இந்த படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து பிரபலங்களும் ப்ரமோஷன் பணிகளை மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன், சரத்குமார், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ஐஸ்வர்ய லட்சுமி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் இந்த படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் படத்தின் நடித்த அனுபவங்களை குறித்து பேட்டி மூலம் கூறியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது வரலாற்று கதை கொண்ட இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பின் பொழுது செட்டிக்குள் நுழைந்த உடனே எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த படப்பிடிப்பினை பார்க்க எனது மகள் ஆராத்யா அவ்வப்பொழுது உடன் வருவார் என்றும் அப்பொழுது மணிரத்தினம் எனது மகளுக்கு ஆக்சன் என்று கூறும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் இது குறித்து தனது மகள் என்னிடம் கூறிய பொழுது எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தது என்றே தெரிவித்துள்ளார். எனவே இந்த படத்தில் ஒரு சில காட்சிக்கு ஆக்சன் என்று கூறியது ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரிதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தினை லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்கள் பல கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்கள் மேலும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அந்த பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.