தமிழ் சினிமா உலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் அதாவது பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்.
அதில் முதல் பாகம் அண்மையில் வெளிவந்தது இந்த படம் சோழர் கால வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது அந்த வகையில் படத்திற்கு தேவையான முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் படத்தை பார்க்க பலரும் ஆவலாக இருந்தனர்.
படமும் வெளிவந்து முதல் நாளே எதிர்பார்க்காத வகையில் 60 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தில் குந்தவை மற்றும் நந்தினி கதாபாத்திரத்தில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தனர். அவர்கள் இருவரும் திரையில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக ஜொலித்தனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் அணிந்திருந்த நகைகளும் தான்.
இந்த நிலையில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யாராய் அணிந்திருந்த நகைகள் குறித்து சில தகவல்கள் இணையதள பக்கத்தில் கசிந்துள்ளன. ஆம் அந்த நகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க தங்கத்தினால் செய்யப்பட்டவை சோழர் கால கல்வெட்டுகளில் இருந்த தகவலை வைத்து தான் அந்த நகைகள் அனைத்தும் செய்யப்பட்டது அதற்காக தனிக்குழுவே ஆறு மாதமாக கடும் உழைப்பை கொடுத்துள்ளனராம்.
மும்பையில் இருக்கும் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றுதான் இந்த நகைகளை தயார் செய்துள்ளனர் திரிஷா மற்றும் ஐஸ்வர்யாராய் இருவரும் அணிந்திருந்த நகைகள் கிட்டத்தட்ட இரண்டு கிலோவுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அந்த நகைகளுக்கு என ஸ்பெஷல் லைட்டிங் ஏற்பாடு எல்லாம் செய்து இயக்குனர் மணிரத்தினம் காட்சி அமைத்தார் என கூறப்படுகிறது. இப்படி இந்த படத்தில் பல விஷயங்களை இயக்குனர் மணிரத்தினம் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.