காதலுக்கு வயது தடையா.? இல்லையா.? மனம் திறந்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா.!

rashmika-mandanna
rashmika-mandanna

கன்னட பெண்ணான நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது சொந்த மொழியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாரோ இல்லையோ பிறமொழியில் சிறப்பாக ஜொலிக்கிறார் தெலுங்கில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து உள்ளதால் தெலுங்கு சினிமா இவரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மட்டுமல்லாமல் தற்போது நடிகர் உடன் கைகோர்க்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது அந்த காரணத்தினால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் ஏன் தற்போது கூட இவர் அல்லி அர்ஜுனுடன் கைகோர்த்த “புஷ்பா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்தியில் மிஷன்  மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் இவர் நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்த சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இன்னமும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருந்தாலும் இவருக்கு ஏற்ற மாதிரியான சிறந்த கதைகள் அமையாததால் தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் நடிக்க பொறுமை காத்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற  நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.அப்பொழுது ஒருவர் நீங்கள் உங்களை விட இளையவரான ஒருவரை காதல் செய்வீர்களா  என கேட்டார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா.

அதில் என்ன தவறு இருக்கிறது காதலுக்கு வயது ஒரு தடை இல்லை மொழியும் தடை இல்லை அவர் நமது எண்ணங்களை மாற்றாதவராக நம்மிடம் ஆதிக்கம் செலுத்தவதராக இருக்க வேண்டும் என பதிலளித்தார். இவர் இவ்வாறு கூறியது ரசிகர்களை துள்ளல் ஆட்டம்போட வைத்தாலும் ஒரு சிலருக்கு இது ஆச்சரியமான செய்தியாகவே அமைந்துள்ளது.