நடிகை ரம்பா மிகப்பெரிய “ஒரு கம்பெனிக்கு ஓனரா”.? புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

ramba
ramba

சினிமா உலகில் அழகையும், திறமையும் காட்டினாலே போதும் அந்த நடிகை மிகப்பெரிய ஒரு உச்சத்தை அடையலாம் அந்த வகையில் பல நடிகைகள் தற்போது சினிமா உலகில் ஜொலிக்கின்றனர் ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் நடிகை ரம்பா 90 கால கட்டங்களில்  தனது அழகையும், திறமையும் காட்டி தொடர்ந்து வெற்றியை சினிமா உலகில் பதிவு செய்தார்.

இவரது அழகை பார்க்கவே ரசிகர்கள் படத்தை பார்த்தனர். முதலில் நடிகை ரம்பா உழவன் என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை விஐபி, நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம், ராசி, அழகிய தீயே, சத்திரபதி என பல்வேறு ஹிட் படங்களில் கொடுத்து அசத்தினார்.

மேலும் தனது கிளாமரையும் காட்டி பாசத்தினால் ரசிகர்கள் இவரை செல்லமாக தொடைழகி ரம்பா என கூப்பிடுவது வழக்கம். சினிமாவில் வெற்றியை கண்ட இவர் 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு தனது குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்தார் நடிகை ரம்பா. இப்பொழுது  இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.

குடும்பத்தை சிறப்பாக கவனித்து வந்தாலும் அவ்வபொழுது தனது அழகான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பார் அப்படியே புகைப்படங்களை வெளியிட்டு ஓடிக் கொண்டிருந்த நடிகை ரம்பா முதல் முறையாக ஒரு சூப்பரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து உள்ளார்.

ramba
ramba

நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார்  கனடாவைச் சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் ஒரு தொழிற்சாலையை நடத்தி வருகிறார். கிச்சன் உபகரணங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்து வருகிறார் முதல் முறையாக நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் தொழிற்சாலைக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.