தமிழ் சினிமாவில் என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவ்வாறு பிரபலமான நமது நடிகை அதன் பிறகு கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றியை கொடுத்த நிலையில் நடிகர் சூர்யாவும் ரகுல் பிரீத் சிங்குடன் ஒரு திரைப்படத்தை இணைந்தார்.
அப்படி உருவான திரைப்படம் தான் என் ஜி கே ஆனால் இந்த திரைப்படத்தின் கதை பல மக்களையும் கவராத காரணத்தினால் மாபெரும் தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் நடிப்பதை விட தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் நடிப்பதற்கு அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை கோல்ப் வீராங்கனை என்பது நம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது.
அந்த வகையில் இவர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றது மட்டுமில்லாமல் அதில் வெற்றியும் பெற்றுள்ளார் பொதுவாக ரகுள் பிரீத் சிங் ஒர்க்கவுட் மற்றும் ஃபிட்னஸ் விஷயங்களில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருவதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் இவர் இப்படி ஒரு விளையாட்டு வீரர் என்பது நம் பலருக்கும் தெரியாத ஒன்று. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது பாலிவுட்டில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.