தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த வாரிசு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சினிமா உலகில் இப்பொழுது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும்..
இவர் ஆரம்பத்தில் நடிக்கும் பொழுது பல அவமானங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார் அதிலும் குறிப்பாக இதெல்லாம் ஒரு மூஞ்சி இதெல்லாம் நடிக்க வந்துவிட்டது என பத்திரிகையாளர்களே கேவலமாக விஜய் பார்த்து விமர்சனங்கள் எழுதியது எல்லாம் உண்டு.. பின் படிப்படியாக வளர்ந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் விஜயின் உறவினரும் நடிகருமான விக்ராந்த் சமீபத்திய தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பற்றி பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது.. நான் ஓரளவுக்கு சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு விஜய் அண்ணாவின் பங்கும் உண்டு என்று கூறினார்.
மேலும் விஜய் பற்றி பேசினார் அவரது வீட்டில் இப்பொழுதும் ஒரு பழைய பத்திரிக்கை இருக்குமாம் அந்த பத்திரிகையில் அந்த காலகட்டத்தில் விஜயை பற்றி கேளிகையான விமர்சனங்களை எழுதி இருப்பார்கள் அதை அப்படியே வைத்திருக்கிறாராம் அதில் “இவனெல்லாம் என்ன மூஞ்சின்னு” சினிமாவில் நடிக்க வந்திருக்கான்.. ஒரு இயக்குனர் பையன் என்பதற்காக இந்த மூஞ்சை தியேட்டரில் போய் பார்க்கணுமா என அந்த பத்திரிகையில் இருக்கிறதாம்..
இந்த செய்தி வெளியான அடுத்த 20 வருடத்தில் அதே பத்திரிக்கை விஜய்யைப் பற்றி அவரது வளர்ச்சியை பற்றியும் பெரிய கட்டுரையாக எழுதி வெளியிட்டராம். அந்த பத்திரிகையையும் விஜய் வைத்திருக்கிறாராம் இதை வைக்கிறார் என்று கூறினார். இதன் மூலம் என்ன தெரிகிறது என்னவென்றால் எவ்வளவு அசிங்கமும் பட்டாலும் தனக்கான பாதையில் சரியாக ஓடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதுதான்..