நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இந்நிலையில் அடுத்த படமாக ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் கசிந்து இணையதளத்தில் வெளி வந்துள்ளது.
இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்திலும் வாடிவாசல் என்ற திரைப் படத்திலும் நடிக்க இருக்க இருக்கிறார் நடிகர் சூர்யா. மேலும் இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இணையதளத்தில் தகவல்கள் கசிந்துள்ளது.
இவர் ஏற்கனவே சூர்யா பாண்டிராஜ் கூட்டணியில் பசங்க 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் சூர்யாவின் 40வது படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்க இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதத்திற்குள் முடிந்துவிடும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இப்படம் 2021 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படம் வெளியிடப்படுவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.