தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இடத்தை பிடிக்க தற்போது சினிமாவில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பவர்கள் தான் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தற்போது வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்தாலும் நல்ல முறையில் கொடுத்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டு வருகின்றனர்.
மேலும் இப்போது இருக்கும் இளம் தலைமுறை நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பலரும் அஜித், விஜய்க்கு தான் ரசிகர்களாக இருந்து வந்துள்ளனர் அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் அறிமுகமாகி பின் படிப்படியாக பிரபல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தற்போது மக்களின் மனதை வென்று நடிகராக உருமாறி உள்ளவர்தான் நடிகர் கவின்.
சில தினங்களுக்கு முன்பு கவின் நடித்த லிப்ட் என்ற திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகியது. விமர்சன ரீதியாகவும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் கவினின் நடிப்பு இதில் சிறப்பாக இருந்தது என கூறிய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் கவின் பேட்டி கொடுத்தார் அப்பொழுது நீங்க தளபதி ரசிகரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கவின் நான் தல அஜித்தின் ரசிகன் ஏனென்றால் நாங்கள் சின்ன வயதில் இருந்தபோது எங்களுக்கு அஜித்தின் படங்களை பார்த்து நாங்கள் பழகி விட்டேன் அஜித் என்றாலே எனக்கு அவ்வளவு பிடிக்கும் மேலும் சினிமாவில் எனவே எல்லா படங்களும் பிடிக்கும்.
அதனால் அனைத்து நடிகர்கள் படத்தையும் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்து விடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். செய்தி தற்பொழுது இணையதளத்தில் தீயாய் பரவி வருவதோடு தல ரசிகர்கள் இச்செய்தியை கொண்டாடி வருகின்றனர்.