தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தனுஷ். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த வாத்தி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று 100 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. அதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
தமிழில் வெற்றி நாயகனாக வரும் தனுஷ் ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஹாலிவுட் போன்ற மொழிகளிலும் பட வாய்ப்பு கைப்பற்றி நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் வெற்றியை மட்டுமே கண்டு வரும் இவர் நிஜ வாழ்க்கையில் சறுக்கள்களை சந்தித்துள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர். 18 வருடம் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த ஜோடி சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தது அதன் பிறகு இருவரும் தனித்தனியாக தனது வேலைகளை பார்க்கின்றனர் நடிகர் தனுஷ் ஒரு பக்கம் படங்களில் நடிப்பது, தயாரிப்பதுமாக இருக்க மறுபக்கம் ஐஸ்வர்யா ரஜினி நடிகர் விக்ராந்த், விஷால் ஆகியோர்களை வைத்து லால் சலாம் என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடும் இவர்களை சேர்த்து வைக்க ரஜினி குடும்பம் எவ்வளவு முயற்சித்தது ஆனால் அனைத்தையும் தோல்வியில் முடிந்தன. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையதள பக்கங்களில் பல செய்திகள் பரவுகின்றன ஆனால் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள 200% வாய்ப்பே இல்லை என பலரும் அடித்து கூறுகின்றனர்.
அதற்கு காரணமும் இருக்கிறது செல்வராகவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பொழுது தயவு செய்து நீ இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாதே கடவுளே உனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துஇருக்கிறார். இப்படி சிங்கிளாகவே இரு என தனுஷ் அண்ணனுக்கு அட்வைஸ் செய்துள்ளாராம். அண்ணனுக்கே இப்படி ஒரு புத்திமதி சொன்ன தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என தனுசு ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர்.