நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் படத்திற்காக தன்னுடைய உடலை வருத்திக்கொண்டு அதே கதாபாத்திரமாக மாறி விடுவார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் படங்களில் என்ன கதாபாத்திரமோ அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது உடலை மாற்றி அமைத்துக் கொள்வார்.
அதேபோல் சினிமாவில் கமலுக்கு பிறகு விக்ரம் தான் எல்லாவிதமான கேரக்டரையும் ஏற்று நடிக்க கூடிய பக்குவம் கொண்டவர். தற்பொழுது விக்ரம் அவர்களுக்கு கோப்ரா திரைப்படம் முடிவடைந்துள்ளது இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் விக்ரம் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் உடன் இணைந்து இருமுகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் முதன் முதலாக விக்ரம் இரட்டை வேடத்தில் ரசிகர்களை கவரும் வகையில் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படத்தில் தான் மூன்று மணி நேரம் மிகவும் கஷ்டப்பட்ட தாகவும் அதற்காக அதிக எபெக்ட் போட்டதாகவும் சியான் விக்ரம் கூறியுள்ளது சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருமுகன் திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்து இருப்பார் இந்த நிலையில் விக்ரம் தினமும் 3 மணிநேரத்திற்கு மேலாக லவ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எஃபெக்ட் போட்டுள்ளாராம். சியான் விக்ரம் இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய சினிமா கேரியரில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் இருமுகன். அதிலும் ஹீரோ மற்றும் வில்லனாக இவரே நடித்திருந்தது தான் இந்த திரைப்படத்தின் பிளஸ்.
முழுக்க முழுக்க தன்னுடைய இரண்டு கதாபாத்திரங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார் இந்த திரைப்படத்தில் தினமும் மூன்று மணி நேரம் லவ் கதாபாத்திரத்திற்காக மிகவும் கஷ்டப் பட்டதாகவும் அதற்காக மூன்று மணி நேரம் செல விட்டதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.