irugapatru : யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இறுகப்பற்று. படத்தில் பிரபல நடிகர் விதார்த், விக்ரம் பிரபு, ஷர்த்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்னதி, ஸ்ரீ ஆகியோர்கள் நடித்துள்ளனர். படத்தின் ப்ரீ ஷோ இன்று காட்டப்பட்டுள்ளது படத்தை பார்த்த பலரும் நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.
படத்தின் கதை என்னவென்றால் உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை குறித்து இந்த படம் பேசி உள்ளது. படத்தை பார்த்த பலரும் நிச்சயம் வெற்றி பெரும் என சொல்லி 4/5 மார்க் கொடு வருகின்றனர் அந்த அளவிற்கு படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
குறிப்பாக விதார்த் ஒரே சாட்டில் நடித்த சீன், பேங்க் சீன் என அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. நடிகர் விதார்த் இருகபற்று படம் மிகப்பெரிய கம்பேக் அதே போல் விக்ரம் பிரபுவும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கானகச்சிதமாக நடித்து அசத்து உள்ளார்.
இவர்களுடன் இணைந்து நடிகைகளும் பின்னி பெடல் எடுத்து இருக்கின்றனர் மொத்தத்தில் இறுகப்பட்டிருக்கும் திரைப்படம் அடுத்த 96 படம் போன்று இருக்கும் என கூறுகின்றனர் அந்த அளவிற்கு மனதை வருடும் படமாக இது இருக்கிறதாம்.
மேலும் திருமணம் ஆனவர்கள் உடனே விவாகரத்து பெறுவது, பிரேக் அப் செய்வது போன்றவர்களுக்கு இது ஒரு பதிலடி கொடுக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இறுகப்பற்று படம் வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி கோலாகலமாககாலமாக திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. பொறுத்து இருந்து பார்ப்போம் வெற்றியா.? தேல்வியா.?