Irudhi suttru : தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பெண் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் 2016 ஆம் ஆண்டு இறுதிச்சுற்று என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார். முதல் படமே பெரிய ஹிட் அடித்தது படத்தில் மாதவன் உடன் இணைந்து ரித்திகா சிங் ஹீரோயின்னாக நடித்தார்.
இவர்களுடன் இணைந்து நாசர், mumtaz sorcar, காளி வெங்கட், ராதாரவி, ரவீந்திர விஜய், எம் கே ரைனா, வெங்கடேசன், தேவராஜன், ராஜ் ஷர்மா என பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர் படம் முழுக்க முழுக்க குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவான கதை என்பதால் இளசுகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரது மத்தியிலும்..
நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடி வெற்றியடைந்து பல வருடங்கள் ஆகிய நிலையில் இறுதிச்சுற்று என்னுடைய கதை தான் என பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. என்னுடைய ரியல் ஸ்டோரி தான் அந்த திரைப்படம் சுதா கொங்கரா.
என்னை முதன்முதலில் நேரு ஸ்டேடியத்தில் தான் சந்தித்து பேசினார் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மணி நேரம் பேசினோம் அவர் என்னுடைய வாழ்க்கை விளையாட்டு ஆர்வம் உள்ளிட்டவற்றை ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டார். பிறகு மும்பையில் இருந்து ஒரு ரைட்டர் வரை வைத்து எழுதினார்கள்..
அப்பொழுது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. ஒரு கட்டத்தில் சுதா கொங்கராவிடம் போய் நான் பேசினேன். அப்பொழுது அவர் எனக்கு கமிஷனர் தெரியும் என மிரட்டினார். இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..
Real Face of Sudha Kongarapic.twitter.com/ux45K56rm4
— Kolly Censor (@KollyCensor) November 26, 2023