பிக்பாஸ் வீட்டில் நடக்கும் முறைகேடு.. வீடு முழுவதும் கேமரா இருப்பது கூட தெரியாமல் உளறி கொட்டிய போட்டியாளர்கள்.!

bigg boss 1
bigg boss 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஒவ்வொரு வார தொடக்கத்தின் பொழுதும் நாமினேஷன் செய்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் அந்த நாமினேஷனில் சிக்கியவர்களில் மக்கள் மத்தியில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கும் நபர் பிக்பாஸ் வீட்டை விட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியேறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்பொழுது 13 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது எனவே கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில் தற்பொழுது இந்த வாரம் குயின்சி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வரும் சிலர் காசு கொடுத்து ஓட்டு வாங்கி வருகின்றன என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் மூன்று போட்டியாளர்கள் தங்களுடைய வாயால் கேமரா இருப்பது கூட தெரியாமல் நேரலையில் உளறியுள்ளார்கள் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இவர்கள் பிக்பாஸ் ரசிகர்கள் போடும் ஓட்டிற்கு தரவராக பிஆர்ஓ வேலை பார்ப்பவர்களுக்கு காசு கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஒவ்வொரு பிரபலங்களும் தங்களுக்கு என வைத்திருக்கும் பிஆர்ஓ மூலம் சினிமா வாய்ப்புகள் மற்றும் பப்ளிசிட்டி தேடிகொள்வது வழக்கம். அப்படி தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மூன்று பிரபலங்கள் தங்களுடைய பிஆர்ஓவை வைத்து காசு கொடுத்து ஓட்டு வாங்கியுள்ளனர் அதாவது பிக்பாஸ் சீசன் 6வது போட்டியாளரான ராம், தனலட்சுமி, ஜனனி ஆகிய மூவரும் பிக்பா ஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ஓரளவிற்கு தெரியவந்துள்ளது.

இதற்கு முன்பு இவர்கள் மூவரை பற்றியும் பெரிதாக தெரியவில்லை எனவே ராம் இரண்டு, லட்சம் தனலட்சுமி ஐந்து லட்சம், ஜனனி ஒரு லட்சம் என்று பிஆர்ஓவிடம் கொடுத்துவிட்டு ரசிகர்களிடம் ஓட்டை வாங்கி வருகின்றனர். இவ்வாறு தங்களுடைய பித்தலாட்ட வேலைகளை தானே கூறியுள்ளார்கள். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் ஒண்ணுமே செய்யாமல் சும்மாவே இருந்து வரும் ராம், அடாவடி பிரச்சனை என இருந்து வரும் தனலட்சுமி இவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு காரணமே இதுதான் என ரசிகர்கள் கிழித்து வருகிறார்கள்.