அண்மையில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ் சினிமா உலகில் முதல் சிங்கிள் ஷாட் நான்லினியர் படமாக வெளியானது. படத்தில் பார்த்திபன் உடன் இணைந்து இளம் நடிகை பிரிகிடா, ரேகா நாயர், பிரியங்கா ரூத், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் போன்ற பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து படத்திற்கு வெற்றியை தேடி தந்தனர்.
அந்த வகையில் இரவின் நிழல் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு பக்கம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு மறுபக்கம் சில விஷயங்கள் சர்ச்சையாகவும் அமைந்தது. இந்த படத்தில் சில நிர்வாண காட்சிகள் அமைந்ததால் அந்த காட்சிகள் குறித்து நடித்த நடிகைகள் மற்றும் இயக்குனரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
அப்படி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த பிரிகிடா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பார். அது குறித்து அவரிடம் பேட்டியில் கேட்கப்பட்ட பொழுது நான் முதலில் அந்த காட்சியில் நடிக்க பயந்தேன் பின்பு இயக்குனர் பார்த்திபன் சார் தான் என் பெற்றோர்களை கன்வென்ஸ் பண்ணி என்னை நடிக்க வைத்தார்.
அது ஒரு நியூட் சீட் தான் என பேசி இருந்தார். தற்பொழுது பிரிகிடா பேசிய மற்றொரு பேட்டி ஒன்றில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை அது ஒரு ட்ரிக் தான் என பேசி உள்ளார். அவர் கூறுவது அந்த ஷாட்டில் நான் ரொம்ப குட்டியான டிரஸ் ஒன்றை அணிந்திருந்தேன்.
அது ஒரு எலாஸ்டிக் மாதிரி, அதை இழுத்து விட்டால் டிரஸ் போட்டிருப்பது போல தெரியாது. இருந்தாலும் அந்த குட்டையான டிரெஸ்ஸை அணிந்து நடிக்கவே நான் ரொம்ப கூச்சப் பட்டேன். ஆனால் பலரும் அதை நிர்வாணமாக நடித்ததாகவே நினைத்து விட்டனர். உண்மையில் அது ஒரு ட்ரிக் ஷாட் தான் நிர்வாணமாக நடிக்கவில்லை என கூறியுள்ளார்.