kaavaalaa : தற்பொழுது தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் தான். இந்தப் பாடலுக்கு பல நட்சத்திரங்கள் நடனமாடி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள்.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெய்லர் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், வசந்த் ரவி, ஜாக்கி சருப், மோகன்லால், விநாயகன், யோகி பாபு, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
ஏற்கனவே அனிருத் பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகின்ற நிலையில் தற்போது ஜெய்லர் திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ஜெயிலர் திரைப்படத்திற்கு இப்படி ஒரு பாட்டை போட்டுள்ளார் என செம காண்டில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
ஏனென்றால் இந்த பாட்டிற்கு சின்னத்திரை நடிகைகள் குட்டி வாண்டுகள் வயதானவர்கள் என அனைவரும் நடனமாடி வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள். அந்த அளவு வைப் பண்ணி வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் பார்த்திபன் திரைப்படமான இரவு நிழல் திரைப்படத்தில் நடித்த சாய்பரியங்கா ரூட் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
ரஜினிகாந்த் தமன்னா ஆட்டம் போட்ட ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான காவாலா பாடல் வெளியாகி இரண்டு நாட்களில் 16 மில்லியன் பார்வையாளர்களை யூடியூபில் கடந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் அதிக ரில்கள் போடப்பட்ட பாடல்களில் சமீபத்தில் வெளியான நான் ரெடி பாடல் இருந்து வந்தது ஆனால் இரண்டு நாட்களிலேயே காவலா பாடல் நான் ரெடி பாடலை ஓரங்கட்டி விட்டது என கூறுகிறார்கள்.
அப்படி இருக்கும் நிலையில் 70 வயதுக்கு மேல் ரஜினிக்கு இப்படி ஒரு ஐட்டம் சாங் தேவையா என வைத்தெரிச்சலில் ட்ரோல் செய்து வருகிறார்கள் சில ரசிகர்கள் சமந்தாவின் ஓ சொல்றியா மாமா விஜயின் ரஞ்சிதமே பாடலை விட இந்த பாடல் தரமாக இருக்கும் என தமன்னாவின் ஹாட் டான்ஸ் ரசிகர்களை வெகுவாக கவரும் எனவும் ஹெட்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் எனவும் கூறி வருகிறார்கள் தமன்னாவின் ரசிகர்கள்.
அப்படி இருக்கும் நிலையில் தற்போது இரவின் நிழல் பட நடிகை சாய் ப்ரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவாலா பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்