தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறார்கள். அந்தவகையில் பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் விஜய் டிவி சீரியலுக்கு என பெயர் போன ஒரு தொலைக்காட்சி. பொதுவாக விஜய் டிவி மற்ற தொலைக் காட்சிகளை காட்டிலும் பல புதிய நடிகைகளையும்,கவர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்களையும் கலக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா, ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்று வருகிறது. அதோடு TRP-யில் இந்த மூன்று நாடகங்களும் முன்னணி வகித்து வருகிறது.
பொதுவாக இந்த மூன்று சீரியல்களும் குடும்ப கதைகளை மையமாக வைத்து இயக்கப்படுகிறது.அந்தவகையில் ஈரமான ரோஜாவே சீரியல் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் பல தடைகளைத் தாண்டி எப்படி வாழ்கிறார்கள் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் இவர்களின் காதல் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த முடியவுள்ளது என்று பலர் கிசுகிசு வந்தார்கள். ஆனால் புதிதாக ஒரு நடிகர் மற்றும் நடிகை இந்த சீரியலின் மூலம் அறிமுகமாக உள்ளார்கள்.
இந்நிலையில் அவர்கள் ஷூட்டிங்கின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.