அந்த சைக்கோ இங்கதான் இருக்கான் என சைக்கோ மாதிரி நடந்து கொள்ளும் ஜெயம் ரவி.! இறைவன் ரிலீசுக்கு முன்பே வெளியான வீடியோ.!

iraivan promo video 2
iraivan promo video 2

iraivan promo video : இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் இறைவன். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மிரட்டியது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது ஏனென்றால் இந்த திரைப்படத்தில் சில காட்சிகள் மிகவும் கொடூரமாக இருந்ததால் தான் படத்தைப் பார்த்த சென்சார் குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக பலரும் கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் இறைவன் திரைப்படம் நாளை திரையரங்கிற்கு வருகிறது இந்த நிலையில் சமீபத்தில் இதன் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு படக்குழு படத்தின் மீதுதான் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அந்த வீடியோவில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இருவரும் ஒரு வீட்டில் இருக்கிறார்கள் அப்பொழுது ஒரு லெட்டர் வந்துள்ளது அந்த லெட்டரில் எழுதிய வசனத்தை படித்து விட்டு ஜெயம் ரவி பதட்டம் ஆகிறார்.

iraivan promo video
iraivan promo video

ஏனென்றால் அந்த லெட்டரில் “ஒழுங்கா வந்து இல்லாட்டி வழக்கம் போல் உனக்கு தெரிஞ்சவங்க பிடிச்சவங்க எல்லாம் செத்துருவாங்க என எழுதியுள்ளார். இதைப் படித்துப் பார்த்த ஜெயம் ரவி வீட்டின் வெளியே வந்து லெட்டர் யார் வைத்திருப்பார்கள் என தேடுகிறார் அப்பொழுது உணவு டெலிவரிக்கு வந்த பையனை ஜெயம் ரவி சைக்கோ போல் மிரட்டுகிறார் பிறகு ஜெயம் ரவியை சமாதானப்படுத்தி நயன்தாரா வீட்டிற்குள் அழைத்துப் போகிறார் இந்த வீடியோ சற்றுமுன் வெளியாகியது இந்த வீடியோவை பார்த்தபின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெயம் ரவி நயன்தாரா ஆகியோருடன் இணைந்து ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தை இயக்கிய அகமது இதற்கு முன்பு எங்கேயும் எப்போதும், மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.