அடேய் என்னடா படம் இது.. இறைவன் படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.! இதோ ட்விட்டர் ரிவ்யூ.

iraivan review
iraivan review

Iraivan twitter review : இறைவன் திரைப்படத்தை அகமது இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இருவரும் தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் தான் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள்.

இறைவன் திரைப்படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருந்ததால் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது இந்த நிலையில் இன்று இந்த திரைப்படம் திரைக்கு வந்துள்ளது இரண்டு மணி நேரம் 33 நிமிடங்கள் திரைப்படத்தின் ரன்னிங் டைம் இருந்துள்ளது.

மேலும் இறைவன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி படத்தில் ஃபேமிலி ஆடியன்ஸ்களை கவரும் வகையில் தான் கதைகள் இருக்கிறது இறைவன் திரைப்படத்தை குழந்தைகளோடு சேர்ந்து வந்து பார்க்க வேண்டாம். இறைவன் திரைப்படத்தின் கதை சந்தோஷத்திற்காக கொலை செய்யும் சைக்கோ கில்லரை கண்டுபிடிப்பது தான்.

அந்தக் கில்லர் கொலை செய்யும் விதமும் அந்த பிணங்களை காட்சிப்படுத்தும் விதமும் மிகவும் கொடூரமாக இருந்ததால் தணிக்கை குழு A சான்றிதழ் கொடுத்திருந்தது அதுமட்டுமில்லாமல் சில கெட்ட வார்த்தைகளை நீக்க சொல்லி இருந்தார்கள் அதை நீக்கிவிட்டால் படத்தில் சுவாரசியம் இருக்காது என ஏ சான்றிதழ் கிடைத்தாலும் பரவாயில்லை என படத்தின் கதைகள் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை இவ்வாறு ஜெயம் ரவி கூறியிருந்தார் இந்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது முதல் பாதியை பார்த்த ரசிகர்கள் தங்களை கருத்தை தெரிவித்துள்ளார்கள்.

இறைவன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு மற்றும் எமோஷனல் சீன் சூப்பராக இருந்ததாகவும் ராகுல் போஸ் நன்றாக நடித்திருந்ததாகவும் படத்தில் ரத்த காட்சிகள் அதிகமாக இருந்ததாகவும் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் பாடல் மற்றும் பிஜிஎம் மொக்கையாக இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் ஃபர்ஸ்ட் ஹால்ப் ஓகே கதை கொஞ்சம் ஸ்லோவாக இருந்ததாக கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் ரத்த காட்சிகள் அதிகமாக இருந்ததாகவும் கூறினார் மேலும் இரண்டாவது பாதிக்காக வெயிட்டிங் என பதிவு செய்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் ஒரு ரசிகர் கிரைம், டிராமா, மெனி டெவிசன்ஸ் இறைவன் பாடம் இன்டர்வெல் சர்ப்ரைஸ் எமோஷனல் சீன்ஸ் என அனைத்து அழகாக காட்டியுள்ளார்கள் இரண்டாவது பாதிக்காக வெயிட்டிங் என கூறியுள்ளார்.

இடைவேளைக் காட்சி மிக  அருமையாக இருந்ததாகவும் பாடல் பெரிதாக கை கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்கள்.

மேலும் ஒருவர் முதல் பாதி இரண்டாவது பாதி அருமையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு ரசிகர் முதல் பாதி சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கும்படி இயக்குனர் செய்துவிட்டார் சைக்கோ திரில்லர் மூவி அருமையாக இருந்தது அடுத்த இரண்டாவது பாதிக்காக வெயிட்டிங் என பதிவு செய்துள்ளார்