Iraivan Movie Collection : ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் இறைவன் திரைப்படத்தின் 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. சைக்கோ மற்றும் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இறைவன் படத்தினை அஹமத் இயக்கி உள்ளார்.
இதில் ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கடந்த வியாழன் கிழமை திரையரங்களில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது. ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து தனி ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்த படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றதனால் அதே போலவே இறைவன் படமும் அமையும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வந்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவன் தொடர்ந்து கொலைகளை செய்து வருகிறான் அவனை காவல்துறை அதிகாரியான ஜெயம் ரவி எப்படி பிடிக்கிறார், கொலைக்கான காரணம் என்ன என்பதே படத்தின் கதை. ரசிகர்கள் அண்மையில் வெளியான போர் தொழில் படத்தை போலவே இறைவன் இருப்பதாக கூறி வருகின்றனர்.
மோசமான காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் போன்றவை இருப்பதனால் இறைவன் படைத்திருக்க ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. எனவே ஜெயம் ரவி பிரஸ் மீட்டில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு படத்திற்கு வர வேண்டாம் என கூறினார். தற்பொழுது காலாண்டு விடுமுறை என்பதால் பெற்றோர்கள் குழந்தைகளையும் தியேட்டருக்கு அழைத்துச் சென்று சந்திரமுகி 2 திரைப்படத்தினை பார்த்து வருகிறார்கள்.
இதனால் இறைவன் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி முதல் நாளில் இப்படம் ரூபாய் 2.50 கோடியிலிருந்து ரூபாய் 3 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இரண்டாவது நாள் வசுலில் வெறும் ரூ.1.75 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு வசூல் குறைந்து வருவதால் படக் குழுவினர்கள் வேதனையில் உள்ளனர்.