iraivan Movie : நடிகர் ஜெயம் ரவி இறைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இதற்கு முன்பு தனி ஒருவன் திரைப்படத்தில் இருவரும் இணைந்து ஒன்றாக நடித்திருந்தார்கள் மேலும் இறைவன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார் படத்தில் நரேன் விஜயலட்சுமி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தின் நடித்துள்ளார்கள்.
மேலும் இறைவனின் திரைப்படத்தை வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியாகிய டிரைலரை பார்த்து பலரும் மிரண்டார்கள் சைக்கோ கொடூர வில்லன் போல் ட்ரைலரில் காட்டி இருந்தார்கள்.
மேலும் இறைவன் திரைப்படத்தைப் பார்த்த சென்சார் குழு அதிர்ந்தது என்னடா இப்படி காட்சிகள் வச்சிருக்கீங்க என படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தது மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 33 நிமிடங்கள் இந்த நிலையில் சில ப்ரோமோ வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.