Iraivan : நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் இவரின் அடுத்த திரைப்படமாக இறைவன் திரைப்படம் நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த திரைப்படத்தை அகமது இயக்கியிருந்தார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார்.
சைக்கோ திரில்லரில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் படத்திற்கு ஏ சற்று கிடைத்ததால் குடும்பத்துடன் சென்று பார்க்க முடியாத அவல நிலை அதனால் படத்தின் வசூல் கொஞ்சம் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் குழந்தைகள் பெண்கள் என யாரும் படத்திற்கு போக முடியாத நிலை.
இயக்குனர் அகமது நடிகர் ஜெய் வைத்து வாமனன் திரைப்படத்தை இயக்கியிருந்தார் அது மட்டும் இல்லாமல் என்றென்றும் புன்னகை திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது இறைவன் திரைப்படத்தை அகமது இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி நயன்தாரா ராகுல் போஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.
படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் படம் கொடூரமாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி நயன்தாரா மீண்டும் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
அதற்கு காரணம் ஏற்கனவே ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா தனி ஒருவன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள் ஆனால் இறைவன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை அதற்கு காரணம் ஏ சான்றிதழ் அது மட்டும் இல்லாமல் ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க முடியாத நிலை இந்த நிலையில் இறைவன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தற்பொழுது தெரியவந்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்த்த நிலையில் இறைவன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 2.50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது மற்ற இடங்களில் 60 லட்சம் ரூபாய் என ஆக மொத்தம் மூன்று கோடி ரூபாய் மட்டுமே முதல் நாளில் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கவலையில் இருக்கிறார்கள்.