உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் டி20 போட்டி 15 ஆவது சீசன் இந்த வருடம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் 16வது சீசனை நடத்துவதற்கான வேலைகளில் பிசிசிஐ நிறுவனம் மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது குறிப்பாக இந்த வருடம் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்க மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு நாட்கள் நடைபெற்றது அதன் காரணமாக வருகின்ற 2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்முறை வருகின்ற டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று கேரளா மாநிலம் கொச்சியில் மினி ஏளமாக சிறிய அளவில் நடைபெற இருக்கிறது.
எந்த நிலையில் ஏற்கனவே கைவசம் வைத்துள்ள மீத ஏளத் தொகையிலிருந்து எக்ஸ்ட்ராவாக 5 கோடிகளை பயன்படுத்திக் கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஒவ்வொரு ஆணியும் ஏலத்திற்கு முன்பாகவே தங்கள் தக்க வைத்துள்ள வீரர்களையும் விடுவித்த வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது அதற்கு இன்னும் ஓரிரு நாட்களே இருப்பதால் ஐபிஎல் தொடரில் பங்கு பெறும் அனைத்து அணிகளும் ஏலத்துக்கு முன்பாகவே இறுதி கட்ட அணியை தீர்மானிக்கும் வேளையில் மும்பரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் நான்கு உலக கோப்பையை வென்று இரண்டாவது வெற்றிகர அணியாக திகழும் சிஎஸ்கே அணி இந்த வருடம் மோசமாக அமைந்ததால் சுமாராக செயல்பட்ட வீரர்களை கழற்றி விட்டு புதிய வீரர்களை எடுக்க முடிவு செய்துள்ளது அடுத்த தலைமுறை கேப்டனை உருவாக்குவதற்காக இந்த வருடம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா பேட்டிங் பவுலிங் பில்டிங் என அனைத்திலும் ஃபார்மை இழந்தார்.
அவருடைய தலைவர் தலைமையில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பை இழந்ததால் கேப்டன் பதவியே வேண்டாம் என மீண்டும் தோனியிடமே வழங்கினார் இறுதியில் காயத்தால் வெளியேறிய அவருக்கு சென்னைக்கும் அவருக்குமிடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் அடுத்த வருடம் விளையாட மாட்டார் எனவும் செய்திகள் வெளியானது.
ஆனால் சென்னை சம்பந்தமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜடேஜா டெலிட் செய்ததால் அவர் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சிஎஸ்கே அணி விளையாடுவார் என கூறியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் தற்பொழுது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐபிஎல் 2023 தொடரில் முக்கிய வீரராக ரவீந்திர ஜடேஜாவை சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார் அவருக்கு முன்பாக தனது கேரியரின் கடைசி கிரிக்கெட் போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவித்த கேப்டன் தல தோனி வழக்கம்போல் முதல் வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் சுமாராக செயல்பட்டு வந்த இங்கிலாந்தின் கிரீஸ் ஜோடானை அந்த அணி நிர்வாகம் கழட்டி விட முடிவெடுத்துள்ளது அவருடன் காயத்தால் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய நியூசிலாந்தின் ஆடம் மில்னேவையும் ஏற்கனவே ஜடேஜா இருப்பதால் பெரும்பாலும் வாய்ப்புகள் பெறாமல் பெஞ்சில் அமர்ந்து வரும் மிச்சேல் சாட்னறையும் விடுவிக்க முடிவு செய்துள்ளது சென்னை நிர்வாகம் அதுமட்டுமில்லாமல் தமிழக வீரர் நாராயன் ஜெகதீசையும் விடிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஏலத்திற்கு முன்பாகவே 2023ல் நடைபெற இருக்கும் போட்டியில் ஒன்பது வீரர்களை தக்க வைத்துள்ளது சென்னை அணி அந்த வகையில் எம்எஸ் தோனி, ரவீந்திரர் ஜடேஜா, மொயின் அலி, சிவம் துபே, ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே, முகேஷ் சௌத்ரி, ட்வயன் பிரிட்டோரியஸ், தீபக் சஹர். அதேபோல் கழற்றிவிட முடிவெடுத்துள்ள 4 வீரர்களான ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், மிட்சேல் சாட்னர், நாராயன் ஜெகதீசன் ஆவார்கள்