IPL – ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்து கொள்வீர்களோ – அதற்கு ஏற்றார் போல சம்பளம் மாற்றப்படும் BCCI முடிவு.! முழு விவரம் இதோ.

ipl
ipl

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது மக்களையும் மகிழ்வித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 15 வது சீசன் அடுத்த வருடம் தொடங்குகிறது இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் புதிதாக 2 அணிகள்  சேர்க்கப்பட்டு அடுத்த வருடம் 10 அணிகள் களம் இறங்கியிருக்கின்றன.

அதற்கு முன்பாக BCCI ஒரு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது அதாவது ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் அதில் இரண்டு இந்தியர்கள் இரண்டு வெளிநாட்டவர்கள் அடிப்படையில் இருக்கலாம் அல்லது மூன்று இந்தியர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் என்ற அடிப்படையில் கூட நீங்கள் தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ கூறி உள்ளது.

மற்ற வீரர்களை ரிலீஸ் செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தேர்ந்தெடுக்கும் காலக்கெடு டிசம்பர் 25ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் முதல் வீரருக்கு 15 கோடியும் மற்ற வீரர்களுக்கு அந்த 42 கோடியில்இருந்து 15 கோடி போக மீதியிருக்கும் தொகையும் அந்த மூன்று வீரர்களுக்கு பிரித்து தரப்படும் என கூறப்படுகிறது. அ

ணியின் மூன்று வீரர்கள் மட்டும் தக்க வைத்துக் கொண்டால் 33 கோடி கழிக்கப்படும் அதில் முதல் வீரருக்கு 15 கோடியை இரண்டாவது வீரர்கள் 11 கோடி 7கோடி என ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீரரை தக்க வைத்துக் கொண்டால் 14 கோடி 10 கோடி ஒதுக்கப்படும் ஒரு வீரரை தக்கவைத்துக்கொள்ளும் அணிகள் 14 கோடி செலுத்த வேண்டும்.

இச்செய்தியை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலை தளப் பக்கத்தில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். இது இப்படி இருக்க IPL அணி owner – கள் மட்டும் மண்டையை பிசிக்கொண்டு இருகின்றனர் காரணம் யாரை தக்க வைப்பது யாரை ரீலிஸ் என்று தெரியாமல் இருகின்றனர்.