இந்தியாவில் IPL – ல் போட்டிகள் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது இதுவரை 14 IPL சீசன் வெற்றிகரமாக் முடிந்த நிலையில் அடுத்தாக 15 வது கட்ட சீசன் மிக விரைவிலேயே தொடங்க இருக்கிறது ஆனால் இந்த முறை 8 அணிகள் இல்லை.
மாறுதலாக புதிய இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 10 அணிகள் விளையாடும் என தகவல் வெளியாகி உள்ளது அதனை தொடர்ந்து தற்போது ஐபிஎல் அணி வீரர்களின் ஏலம் வெகு விரைவிலேயே நடத்தப்பட இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் நடப்பதற்கு முன்பாக அந்த அணிகள் தனது முக்கிய வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் BCCI தெரிவித்து உள்ளது.
அந்த தகவல் என்றால் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் அதில் 3 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரையும் தக்கவைத்துக் கொள்ளலாம் அப்படி இல்லை என்றால் இரண்டு இந்திய வீரர் இரண்டு, வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் .
மீதி இருக்கின்ற வீரர்கள் ஏலத்தில் கலக்கப்பட்டு எடுக்கப்படுவார்கள். இதுவரை ஏலத்தின் போது 90 கோடி வரை செலவு செய்யலாம் என அணிக்கு அறிவித்த நிலையில் இந்த முறை 95 முதல் 100 கோடி வரை செலவு செய்ய விதிமுறை கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த மெகா ஏலத்தை மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் காண பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த ஏலத்திற்கு முன்பாக புதிதாக இரண்டு அணியை யார் கைபட்ட போகிறார்கள் என்பதை தெரிந்த பின் தான் IPL பிளேயர் ஏலம் எடுக்கபடும் என தெரிய வருகிறது.