இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடத்தப்படுகிறது இதுவரை 15 சீசன் முடிந்த நிலையில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 16 வது சீசன் கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் விளையாட இருக்கிறது.
மொத்தம் 70 போட்டிகள் நடக்க இருக்கிறது ஒவ்வொரு அணியுமே தனது சொந்த மண்ணில் ஏழு போட்டிகள் விளையாட இருக்கிறது இதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என கூறப்படுகிறது. ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் விரல் விட்டு என்னும் நாட்களே இருப்பதால் கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மறுபக்கம் முதல் நாள் பிரமாண்டமான நிகழ்ச்சிகள் உள்ளது அதன்படி IPL துவக்க விழா அன்று கிளாமர் டான்ஸ் ஆட இரண்டு டாப் நடிகைகள் களம் இறங்க உள்ளன.. இரண்டு பேரும் வேறு யாரும் அல்ல.. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக ஓடிக்கொண்டிருக்கும் தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர்கள் தான்..
ஐபிஎல் துவக்க விழாவில் கிளாமர் நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன மார்ச் 31ஆம் தேதி இரவு 7. 30 மணிக்கு இந்த துவக்க விழா நடைபெற இருக்கிறது. கடந்த சில வருடங்களாக நடிகை தமன்னா கிளாமரில் ஓவர் ஆட்டம் போடுகிறார் இந்த நிலையில் ஐபிஎல் துவக்க விழாவில் நடிகை தமன்னாவின் கிளாமர் படும் பயங்கரமாக இருக்கும் என தெரிய வருகிறது தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும்..
வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாகவும் கிளாமரில் இறங்கி அடிப்பார் என ரசிகர்கள் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.. இது எப்படியோ ஐபிஎல் துவக்க விழா களைகட்ட போகிறது என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் படும் வைரலாகி வருகிறது.