IPL – ல் போட்டி போதே ரோஹித்திடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து பேசிய போல்ட்.! உண்மையை உடைத்த முன்னாள் NZ வீரர்.

rohit-and-trent-boult
rohit-and-trent-boult

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர் மொத்த உள்ளது. இந்த போட்டி நாளை நடக்க உள்ளது இதனை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும்   கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் இந்த போட்டியை காண பெரிதும் காத்துக் கிடக்கின்றனர்.

இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதோடு மட்டுமல்லாமல் ஒருவருக்கு ஒருவர் மிகப்பெரிய அளவில் மல்லு கட்டுவதால் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா டிரென்ட் போல்ட் இருவரில் யாரும் ஆதிக்கம் அதிகமாக செலுத்துவார்கள் என்பது குறித்து பலரும் கருத்துக்களை கூறி வந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷேன் பாண்ட் இது குறித்து கூறுகையில் ரோகித் சர்மா, போல்ட் ஆகியோர் இருவருமே மிக சிறந்த வீரர்கள்.

ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து போல்ட் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சமீபகாலமாக  சேர்ந்து விளையாடி வருகின்றனர். ஐபிஎல் தொடரின் போது பயிற்சி ஆட்டத்தில் ரோகித்துக்கு போல்ட் நிறைய பந்துகளை வீசி உள்ளார் அதில் பெரும்பாலான பந்துகள் அவரின் பேடில் தான் பட்டன இதற்கு போல்ட் இதுபோன்றுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இருக்கும் என அப்போதே கூறினாராம்.

மேலும் இருவருமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து பல மாதங்களுக்கு முன்பே பேசியுள்ளனர் இருவரும் தற்போது எதிர் எதிராக விளையாடுவோம் என்பதை முன்பே கணித்து இருந்ததனர் என கூறினார். நாளை நடக்கவுள்ள போட்டியில் யாரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் கூட்டம் தற்போது எதிர்நோக்கி இருக்கின்றனர்.