விஜயின் “வாரிசு” படத்தில் இணைந்த மிரட்டலான வில்லன் நடிகர் – வெளிவந்த புதிய அப்டேட்.!

varisu-vijay
varisu-vijay

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சுமாரான வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் இணைந்து நடித்து வருகிறார் இந்த படம் விஜய்க்கு 66 வது படம் ஆகும். இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவை அண்மையில்  வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகியது. அதன்படி இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறதாம் படத்தில் விஜய் உடன் இணைந்து முதல் முறையாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா இணைத்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து குஷ்பூ, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சங்கீதா, பிரபு, ஷ்யாம் போன்ற பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் சில வெளியாகி படக்குழுவை ஆச்சரியமடை செய்தது.

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் என்று வெளியாகும் என பட குழு திட்டவட்டமாக அறிவித்ததை எடுத்து படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் வாரிசு படத்தில் இணையுள்ள புதிய பிரபலம் ஒருவர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஆம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

s j surya
s j surya

நடிகர் எஸ் ஜே சூர்யா இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன், மெர்சல் போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ்.ஜே சூர்யா அண்மைக்காலமாக வில்லன் கதாபாத்திரத்தில் பின்னி படம் எடுத்து வருகிறார். அதனால் வாரிசு படத்திலும் இவரது நடிப்பு பெரியளவு பேசப்படும் என்பது தெரிய வருகிறது.