எதிரி போடுற ஒவ்வொரு பாலிலும் அவன் பலவீனம் என்னன்னு கணிச்சிகிட்டு இருக்கேன்.! வெளியானது மிரட்டலான ஈஸ்வரன் பட டீசர்.!

simbu

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.

சிம்பு இந்த திரைப்படத்திற்கு முன்பே சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அந்த திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரனுக்கு ஒரே மாதத்தில் முடித்துக் கொடுத்தார்.அந்த ஒரு மாதத்தில் அவருக்கு பல பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது ஆனாலும் அதையெல்லாம் தாண்டி சிம்பு அந்த படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டார்.

மேலும் அந்த திரைப்படத்தின் பாடல்கள்,ஃபர்ஸ்ட் லுக் என எல்லாம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது பலருக்கும் தெரியும்.

இந்நிலையில் அந்த திரைப்படத்தின் டீசர் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் பலரும் சிம்பு இந்த திரைப்படத்தில் வேற லெவலில் நடித்திருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த டீசரை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த டீசர்.