எம்ஜிஆருக்கு பிறகு விஜயகாந்த்திடம் தான் – அந்த நல்ல குணம் இருக்கு வானத்தைப்போல படத்தில் நடித்த நடிகர் பேட்டி.!

vijayakanth-
vijayakanth-

80,90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர்கள் ரஜினி கமல் ஆனால் இவர்களுக்கு நிகராக தொடர்ந்து கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றிகளை ஒரு பக்கம் கொடுத்து ஓடியவர் விஜயகாந்த் ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் போன்றவர்களையே ஓவர் டேக் செய்து சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் விஜயகாந்த்.

தொடர்ந்து ஆக்சன் மற்றும் கிராமத்து படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு சமயத்தில் இவர் அரசியல் பிரவேசம் கண்டார் அரசியலிலும் சிறப்பாக பயணித்தாலும் தற்பொழுது விஜயகாந்த் உடல்நிலை மோசமாக இருக்கின்ற காரணத்தினால் முழு ஈடுபாடுடன் அவரால் எதையும் செய்ய முடியாமல் ஓய்வு எடுத்து வருகிறார்.

எப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்த் பற்றிய செய்திகள் அவ்வப்போது வருகிறது குறிப்பாக சில நடிகர்கள் விஜயகாந்த் பற்றி பெருமையாக பேசி வருகின்றனர் அந்த வகையில் காமெடி நடிகர் ஜெயமணி நடிகர் விஜயகாந்த் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது விஜயகாந்த் ஒரு தங்கமான மனுஷன்.

எம்ஜிஆருக்கு பிறகு உதவி செய்வது பிரச்சனை என்றால் அதை தீர்த்து வைப்பதில் விஜயகாந்த்தை அடிச்சிக்க ஆளே இல்லை.. எனக்கு மிகப்பெரிய உதவியை செய்துள்ளார் விஜயகாந்த் நானும் வடிவேலும் மதுரையை சேர்ந்தவர்கள் நாங்கள் இருவரும் பங்காளிகள்.

ஆனால் எங்கள் இருவருக்கும் இடையே சில சண்டைகள் இருந்தது.  இதை அறிந்து கொண்ட விஜயகாந்த் உடனே என்னையும் வடிவேலுவையும் அழைத்து அந்த பிரச்சனையை முடித்து எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தார். மேலும் அவர் சொன்னது நடிகர் சங்கம் பல கோடி கடனிலிருந்து அதை விஜயகாந்த் தான் பொறுப்பில் எடுத்து அந்த கடனை எல்லாம் அடைத்து மீட்டெடுத்தார் என கூறினார்.