பொதுவாக சினிமாவை பொருத்தவரை அனைவராலும் விரைவில் பிரபலமடைந்து விட முடியாது. சினிமா ஆசை இருக்கும் பிரபலங்கள் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் பல ஆண்டு காலங்களாக நடித்தும் மக்கள் மத்தியில் பிரபலமாகாமல் இருந்து வரும் நடிகர் தான் செங்கல் சைக்கோ ராம்குமார்.
இவர் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நிலையில் இவரை வைத்து பல மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்களை பகிர்ந்து உள்ளார். அவர் கூறியதாவது, சொந்த ஊர் மதுரை தான் என்னுடைய அப்பாவின் மூலம்தான் நான் கலா மாஸ்டர் குழு சேர்ந்து சில ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றி வந்தேன்.
அதற்குப் பிறகு பேராண்மை, ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன் போன்ற பல திரைப்படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றேன் இவ்வாறு நடித்தும் பெரிதாக பிரபலமடைய முடியவில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தெரியபொழுது பலரும் என்னை ஏமாற்றினார்கள் அந்த வகையில் முக்கியமாக பார்த்திபனின் துணை இயக்குனர் என்று ஒருவர் என்னை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாகவும் கூறி ஏமாற்றினார்.
அதன் பிறகு 6 மாதங்கள் கழித்து பேராண்மை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வெங்கடேஷ் வந்தார். ஆனால் அதிலும் கும்பலோடு கும்பலாக தான் இருந்தேன். இதனை அடுத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன் தான் என்னுடைய குருநாதர் என்று சொல்லலாம்.
நடிப்பு சம்பந்தமான பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார். அவர் மிகவும் நல்ல மனிதர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நாங்கள் கஷ்டப்பட்ட காரணத்தினால் எங்களை லடாக் கூட்டி சென்றார் அதற்கு பிறகு பல இடங்களிலும் வாய்ப்பு தேடி அடித்திருந்தார் ஆனால் எந்த கதாபாத்திரமும் சொல்லும் அளவிற்கு இல்லை.
பிறகுதான் த்ரிஷா இல்லைனா நயன்தாரா திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தில் இயக்குனர் சைக்கோ கதாபாத்திரத்தில் யாராவது நடிக்க வைப்பதற்காக பல நாட்களாக தேடினார் பின்னர் நான் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருந்ததை பார்த்த அவர் இவர் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என என்னை தேர்வு செய்தார் அந்த படத்தின் மேனேஜரிடம் எனக்கு போன் செய்து கேட்டதாக சொல்லி இருக்கிறார். உடனே அந்த மேனேஜரும் எனக்கு போன் செய்தார்.
அப்பொழுதெல்லாம் கூட இருக்கும் பசங்க போன் செய்து உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு என்று கலாய்ப்பார்கள் நானும் மேனேஜர் தான் கூப்பிடுகிறார் என்று தெரியாமல் அங்கேயே இருடா வரேன் என்று அசிங்க அசிங்கமாக திட்டினேன் பின்னர் அங்கே சென்று பார்த்த பிறகு தான் தெரிகிறது படத்தின் மேனேஜர் தான் போன் செய்திருக்கிறார் என்று. நான் பேசியதை ஸ்பீக்கரில் போட்டு தயாரிப்பாளர் இயக்குனர்கள் போன்றவர்கள் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு தான் எனக்கு திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என செங்கல் சைக்கோ ராம்குமார் கூறியுள்ளார்.