வர்ணித்தபடி மெசேஜ்.. மனைவி இல்லை வீட்டிற்கு வருகிறாயா.? சன் டிவி சீரியல் நடிகைக்கு தொல்லை கொடுத்த பிரபலம்

sun tv
sun tv

Serial actress: சினிமா மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு அட்ஜஸ்மெண்ட் தொல்லை இருந்து வருகிறது. சினிமாவில் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் பொதுவாக ஒரு நடிகை சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் அவருடைய மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் என்னை அழைத்ததாக பிரபல நடிகரின் மீது குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கம்.

அப்படி இந்த சீரியலின் மூலம் ஏராளமான பிரபலங்கள் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆனந்த ராகம் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்தான் நடிகை ரிஹானா. தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

நடிகை ரிஹானா சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றியத்துக்கு பேட்டியளித்த நிலையில் அதில் ஏராளமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அப்படி ஒரு பிரபல நடிகர் தனக்கு தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார். அதாவது, அந்த நடிகருக்கு பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் அவர் மீது பல பெண்களுக்கு கிரஸ் இருக்கிறது.

அந்த நடிகருடன் ஒரு படத்தில் நடித்திருந்தேன் அவர் என்னுடைய மொபைல் நம்பர் வாங்கினார். ஒரு கட்டத்தில் அந்த நம்பரில் இருந்து என்னை வர்ணித்தபடி அடுத்தடுத்து மெசேஜ்கள் வந்து கொண்டே இருந்தது இதனால் உடனே அந்த நபரை என்னுடைய ஃபோனில் பிளாக் செய்து விட்டேன். மேலும் இதனை அடுத்து பிரபல சின்னத்திரை நடிகரான அருண் என்னிடம் போன் செய்து வீட்டில் என் மனைவி இல்லை நீ வரியா என்று கூப்பிட்டார் என ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.