தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜமவுலி தொடர்ந்த பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். சமீப காலங்களாக இவருடைய இயக்கத்தில் உருவாகும் அனைத்து திரைப்படங்களும் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் உருவாகும் படங்களும் மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்று வருகிறது.
அப்படி கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இந்த படம் 550 கோடி வசூல் செய்து 1650 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது. இந்த படத்தில் ராம்சரண், என்டிஆர், அஜய் தேவ், ஆலியா பாட், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளீட்டும் இன்னும் ஏராளமானோர் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் முக்கியமாக இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் நாட்டு நாட்டுப் பாடல் உலகில் உள்ள அனைவரையும் கவர்ந்தது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பிரபல முன்னணி பிரபலங்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் சோசியல் மீடியாவில் சூப்பர் ஹிட் பெற்றது. மேலும் சமீபத்தில் இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில் இவ்வாறு மிகப்பெரிய பொருட்ச அளவில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எனவே ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டதற்காக எவ்வளவு செய்யப்பட்டது என்பது குறித்து ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா சமீப பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது ஆஸ்கர் ப்ரோமோஷன் பணிக்காக மட்டும் ரூபாய் 8.50 கோடியை ஆர்ஆர்ஆர் படக்குழுவு செலவிட்டதாக அந்த படத்தின் இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா சமீப பேட்டியில் கூறினார். கார்த்திகேயன் ஆர்ஆர்ஆர் படத்தின் ஆஸ்கர் ப்ரோமோஷன் பணிகளை முன்னெடுத்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.