ஆறு பேரு தானடா வாங்கடா ஒரு கை பார்த்து விடலாம்… அருவாளுடன் காரை வழிமறித்த ரகுவரன்…

raghuvaran
raghuvaran

Actor Raghuvaran: நடிகர் ரகுவரன் நடுரோட்டில் கத்தியுடன் சண்டைக்கு சென்ற அனுபவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வத்துடன் சென்னைக்கு வந்த ரகுவரனுக்கு எடுத்தவுடன் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே நடிப்பை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சினிமா கல்லூரியில் இணைந்து பலவற்றையும் கற்றுக் கொண்டாராம்.

இந்நிலையில் தான் இவருக்கு ஏழாவது மனிதன் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றுள்ளார். அப்படி ரஜினியின் பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியின் கெட்டப் பெரிதளவிலும் வெற்றினை தந்தது.

ரஜினி விழா ஒன்றில் இதுவரை எனக்கு வில்லனாக நடித்தவர்களில் இரண்டு பேர் தான் சிறப்பு. அதில் ஒருவர் ரகுவரன் பாட்ஷாவை ரீமேக் செய்யலாம் ஆனால் மார்க் ஆண்டனியாக யாருமே  நடிக்க முடியாது என கூறியிருந்தார். இவ்வாறு ரகுவரன் வில்லனாக மட்டுமல்லாமல் குணசத்திர வேடங்களிலும் நடித்து கலக்கினார்.

அப்படி கடைசியாக தனுஷின் படமான யாரடி நீ மோகினி படத்தில் அப்பாவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுவரனுக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார். ஆனால் ரகுவரன் ரோகிணி இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருந்தாலும் ரகுவரன் நிஜத்தில் மிகவும் கோபக்காரராம். அப்படி ஒரு முறை தனது சகோதரருடன் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது இன்னொரு காரில் வந்தவர்கள் ரகுவரன் காரை ஓவர் டெக் பண்ணி நிறுத்தி கெட்ட வார்த்தை சொல்லித் திட்டி இருக்கின்றனர். இதனால் உச்சகட்ட கோபமடைந்த ரகுவரன் தனது காரை வேகமாக ஓட்டி தன்னை திட்டியவர்களின் காரை மறித்து காரில் இருந்து இறங்கி பேனட்டில் ஏறி அமர்ந்திருக்கிறார்.

வாயில் சிகரெட்டை பற்ற வைத்து விட்டு கத்தியை எடுத்துக்கொண்டு எதிர் தரப்பில் இருந்தவர்களை பார்த்து சரி வாங்கடா எத்தனை பேரு ஆறு பேரா வாங்கடா பாத்துக்கலாம் என்றாராம் உடனடியாக கூட்டமும் சேர்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் எதார்த்தமாக அந்த இடத்திற்கு வந்த நாசர் ரகுவரனை தனது காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு விட்டாராம் இவ்வாறு இந்த சம்பவத்தை ரகுவரனின் சகோதரர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.