Interview with producer Lalit Kumar about the movie Leo: லியோ படம் குறித்து தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டி அளித்திருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியானது ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால் கலவை விமர்சனம் கிடைத்து வரும் காரணத்தினால் தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, லியோ படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ரஜினிகாந்த் லியோ படத்தை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டு இருந்தார். லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவருடைய 171வது படத்தினை இயக்க இருக்கிறார்.
ஏற்கனவே மாஸ்டர் படத்திலும் நான் தான் தயாரிப்பாளராக இருந்தேன் மாஸ்டர் படம் வெற்றி அடைந்தது போது விஜய்யிடம் உங்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க நினைக்கிறேன் என்று கேட்டேன் அதற்கு விஜய் அதெல்லாம் எதற்கு? எனக்கு நீங்கள் சம்பளம் கொடுத்து விட்டீர்கள் அதுவே போதும் என்று சொன்னதாக கூறியிருந்தார்.
மேலும் படத்தின் கதையை முதலில் விஜய் தான் தேர்ந்தெடுத்தார். பின்னர் நான் அதில் சில மாற்றங்களை செய்ய சொன்னேன் பின்னர் விஜய்யும் லோகேஷ் கனகராஜ் இடம் இது குறித்து பேசினார். பின்னர் பத்து நாட்கள் கழித்து கதையில் மாற்றம் செய்து தந்தார் லோகேஷ். சமீப காலங்களாக விஜய் படங்கள் தோல்வியடைய காரணம் விஜய் படத்தின் கதையில் தலையிடுவது தான் என்ற ஒரு பேச்சுக்களும் நிலவை வருகிறது.
இவ்வாறு இதற்கு முன்பு லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் சுதந்திரம் தான். பொதுவாக இயக்குனர்கள் கதை எழுத அதில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என மாற்றம் செய்வது வழக்கம். அப்படிதான் சமீப காலங்களாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு கடைசியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இருந்து வருகிறது. எனவே லியோ படத்தின் கலவை விமர்சனத்திற்கும் இதுதான் காரணம் இவ்வாறு இந்த சமயத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் இவ்வாறு பேட்டி அளித்தது ரசிகர்களுக்கு ஆதரவாக உள்ளது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..