Nelson DilipKumar: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும் நிலையில் இதற்காக நெல்சன் திலீப்குமாருக்கு ரோல்ஸ்- ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. எனவே இது குறித்து நெல்சன் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் வேட்டையை குவித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் வெளியான ஜெயிலர் இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படி இரண்டு வாரங்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் ஜெயிலர் பட குழுவினர்கள் படத்தின் வெற்றியினை சமீபத்தில் கொண்டாடினார்கள். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்த படத்தின் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் கார் பரிசாக வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சன்னுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் பரிசளித்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது.
எனவே இது குறித்து நெல்சன் திலீப்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஜெயிலர் படத்தின் வெற்றினை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் மற்றும் அந்த படத்தில் காமெடியனாக நடித்து கலக்கிய ரெடின் கிங்ஸ் இருவரும் பேட்டி ஒன்றில் பங்கு பெற்றனர். அதில் பல கேள்விகள் கேட்க அசால்தாக பதிலும் அளித்தார்கள். அப்படி கார் பரிசளித்தது குறித்து கேட்க, வீட்டு வாசலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்குதாமே என ரெடின் கிங்ஸ்லி கேட்க ஷாக்கான நெல்சன் அதை நானும் கேள்விப்பட்டேன் நடந்தால் சந்தோஷம் என தன்னுடைய ஆசையை கூறியுள்ளார். இவ்வாறு இதன் மூலம் கலாநிதி மாறன் தனக்கு எந்த பரிசு வழங்கவில்லை என நெல்சன் தெரிவித்துள்ளார்.