பெரும் முதலையைப் பிடித்த நெல்சன்.? சத்தமே இல்லாமல் திடீர் சந்திப்பு.! அட இது எப்ப நடந்தது..

nelson dilipkumar
nelson dilipkumar

Nelson Dilipkumar: நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்து எந்த முன்னணி நடிகருடன் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் தற்போது யாருக்கும் தெரியாமல் கமலை சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் இதனை அடுத்து கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இந்த படம் கலவை விமர்சனத்தை பெற்று படும் தோல்வியினை சந்தித்தது ஆனால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தினை இயக்கியிருந்தார். கடந்த 10ம் தேதி அன்று வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தற்பொழுது வரையிலும் 300 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து இருக்கிறது.

இவ்வாறு இதன் மூலம் கம்பேக் கொடுத்திருக்கும் நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படத்தில் எந்த முன்னணி நடிகர் இணையப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீப பேட்டியில் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நெல்சன் பீஸ்ட் படுத்தினால் தன் சந்தித்த விமர்சனங்களையும், பீஸ்ட் படத்தில் என்ன தவறு செய்தேன் என்பதனையும் ஓபன்னாக கூடியிருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது ஒரு பேட்டியில் பீஸ்ட் படத்திற்கு பிறகு உலகநாயகன் கமலஹாசனை சந்தித்தது குறித்து கூறியுள்ளார். இதுதான் சோசியல் மீடியாவில் வைரலாக வருகிறது. அதாவது, பீஸ்ட் படம் முடிந்த பிறகு கமலை சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவதை பற்றி பேசினாராம் நெல்சன். மேலும் எதிர்காலத்தில் கண்டிப்பாக கமலை வைத்து வித்தியாசமான கதை அமைந்தால் நாங்கள் இணைவோம் என்பது போல பேட்டி அளித்துள்ளார்.