யார் இந்த தன்ராஜ்.. ஜெயிலர் திரைப்படத்தில் டார்க் காமெடியில் பட்டையை கிளப்பிய ஒரே நபர்.!

Rajinikanth
Rajinikanth

Jailer Movie: ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் காமெடி படம் என்று சொல்லப்பட்டாலும் அதில் சிவராஜ்குமாரின் ஆக்சன் காட்சிகளுக்கும், மோகன்லாலின் மாஸ் கேமியாலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையும் கலக்கியவர் தான் தன்ராஜ். இவரை எங்கே இருந்து பிடித்து வந்தேன் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பகிர்ந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அனைத்து திரைப்படங்களிலும் ஏதாவது ஒரு நடிகர் தனது வித்தியாசமான காமெடி திறமையை வெளிப்படுத்தி பிரபலம் அடைந்து வருகிறார்கள். அப்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்திலும் நடித்திருந்தார் இதிலும் வேற லெவலில் பிரபலமானார். இவரைத் தொடர்ந்து கோமாளி சுனில் இவருக்கு கிளி கதாபாத்திரம் வித்தியாசமாக அமைந்ததால் ரசிகர்களை பெரிதளவிலும் சிரிக்க வைத்தது இவ்வாறு இந்த நடிகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

அப்படி ஜெயிலர் படத்தில் டார்க் காமெடியாக ரசிகர்களை மிகவும் சிரிக்க வைத்த கேரக்டர் தான் வில்லன் வர்மனாக நடித்துள்ள விநாயகத்தின் நண்பர் தன்ராஜ். இந்த படத்தில் இவருடைய ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை பெருதளவிலும் ரசிக்க வைத்துள்ளது. இவ்வாறு நடிகர் தன்ராஜ் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

jailer
jailer

இப்படி ஒரு கேரக்டரை எப்படி நெல்சன் பிடித்தார் என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருந்தது அந்த வகையில் அவர் என்னுடைய பழைய ஜிம் மாஸ்டர். 12 வருஷத்துக்கு முன்னாடியே பழக்கம் ஆரம்ப காலத்தில் இருந்தே அவரது வித்தியாசமான செயல்கள் நடவடிக்கைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும் சரியான நேரத்தில் பயன்படுத்த நினைத்து இருந்தேன் ஜெயிலர் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு இவர் செட் ஆவார் என்று நினைத்து வைத்தேன். ரசிகர்கள் அவரது பர்ஃபார்மன்ஸை ரசித்து சிரிப்பது சந்தோஷம் என கூறியுள்ளார். மேலும் டாக்டர் படத்தில் அடி வாங்கும் காட்சியில் கையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லும் நபர் இவர்தான் எனவும் கூறியுள்ளார்.