Leo Movie: தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்த இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் லியோ பற்றியும் விஜய்யுடன் நடித்தது குறித்தும் அவர் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லியோ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு போன்ற திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றது எனவே லியோ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படம் குறித்த மனுசூர் அலிகான் கூறியதாவது, லோகேஷ் கனகராஜ் ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனராக இருந்து வரும் நிலையில் லியோ படத்தில் அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
அப்படி படம் முழுவதும் விஜய்யுடன் மன்சூர் அலிகான் கேரக்டர் உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் இந்த படத்திற்காக தனது டப்பிங் வேலைகளை முடித்து விட்டதாக கூறியுள்ளார். இதனை அடுத்து லியோ படத்திற்கு தனது போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டதாக கூறியவர் பிறகு விஜய் குறித்து விஜய்யின் வெற்றிக்கு அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் தான் காரணம்.
அவரால் தான் விஜய் இப்படி டாப் ஹீரோவாக வர முடிந்தது என கூறியுள்ளார். மேலும் விஜய் தனது கேரக்டரை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்ளவே இல்லை எனவும், விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தில் அவருடன் ஒரு காட்சியில் நடித்துள்ளேன் அப்பொழுது பார்த்த அதே விஜய் தான் இப்பொழுது லியோவில் பார்க்கிறேன்.
விஜய் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருப்பதாக தெரிவித்துள்ளார். பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்பார்ட்டில் எப்பொழுதும் 3000 முதல் 4000 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் இருந்தனர். முக்கியமாக லியோ படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் இருந்தனர். அது எதற்காக என்பது படம் பார்க்கும் பொழுது தான் தெரியும் சினிமாவில் புகை பிடிக்கும், மது அருந்தும் காட்சிகளிடம் பெறக் கூடாது என்றால் அதை விற்பனை செய்வதை முதலில் தடை செய்ய வேண்டும் என மன்சூர் அலிகான் ஆதங்கமாக பேசியிருக்கிறார். லியோ படத்தில் விஜய்யும், லோகேஷும் கடுமையாக உழைத்துள்ளனர் அதற்கான ரிசல்ட் படத்தில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.