S. S. Rajamouli: பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான படம் ரிலீஸ் ஆகி சுமார் 1300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
இன்றைய தேதி வரை தமிழ் சினிமாவில் அதிகபட்ச பட்ஜெட்டில் உருவான முதல் திரைப்படம் ஆர்ஆர்ஆர் தான் என கருதப்படுகிறது. இப்படத்திற்காக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் நிறைய பயிற்சிகள் கொடுக்கப்பட்டதாம் அதேபோல் இப்படத்தில் இடம்பெற்று இருந்த காட்சிகளும் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்றது.
சமீபத்தில் இப்படத்தின் நாட்டு நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் ஒரு விருதை வென்றது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இந்த படம் குறித்து வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் ராஜமௌலி ஒப்புக் கொள்ளும் பொழுது தயாரிப்பாளர்களிடம் ஒரு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால் 24 மணி நேரமும் ஷூட்டிங் நடந்து வந்ததாம். அங்கு பணிபரியும் ஊழியர்களுக்கு மூன்று வேலையும் நான்வெஜ் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எந்த வகையான நான்வெஜ் உணவு கேட்டாலும் உடனே சமைத்துக் கொடுக்க அணையாத அடுப்பு வேண்டும் என்பதுதான் ராஜமௌலியின் கண்டிஷனாம்.
இதனை தயாரிப்பாளர் நிறுவனம் செய்து கொடுத்திருந்தது தான் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. தற்போது இதனை கேள்விப்பட்ட குறிப்பிட்ட கூட்டம் படத்தை ஹிந்து ஹிந்து என்று கூறிவிட்டு அந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டை புனிதமாக வைக்காமல் இப்படி அசைவம் சமைத்தது மிகவும் தவறு என கழுவி ஊற்றி வருகிறார்கள். தற்போது டோலிவுட்டில் இது பெரும் பிரச்சனையை ஏற்பட்டுள்ளது.