Lokesh kanagaraj: நச்சுனு நான்கு படத்தை கொடுத்தவர் தான் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது. இவருடைய வெற்றியின் காரணமாக வருமானமும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
அந்த வகையில் கடைசியாக லோகேஷ் விஜய்யின் லியோ படத்தை இயக்கி இருந்தார் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்பொழுது ரசிகர்கள் ரஜினியின் தலைவர் 171வது படத்திற்காக காத்து வருகின்றனர். இந்த படத்தை தயாரிக்க ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்ட நிலையில் ஆனால் தற்பொழுது தலைவர் 171வது படத்தை தயாரிக்கும் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
எனவே கண்டிப்பாக இந்த படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏற்கனவே முக்கால் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் முழு படப்பிடிப்புகளும் முடிந்தவுடன் ஏப்ரல் மாதத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஆக்சன் திரைப்படங்களை தந்து வரும் லோகேஷ் சமீபத்தில் ரஜினியின் படம் குறித்து கூறிய பொழுது, இந்த திரைப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவராத புதுவகை திரைப்படம். ஆக்சன் திரைப்படம் என்றாலும் இந்த வகை திரைப்படங்களை இதுவரை யாரும் தமிழ் சினிமாவில் முயற்சித்தது கிடையாது.
இதை சொல்லும் பொழுது ரஜினி காந்த் மிகவும் ஆவலுடன் அதில் நடிக்க காத்திருப்பதாக கூறினார் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவ்வாறு முதன் முறையாக இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.