பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் தங்களுடைய மார்க்கெட் குறைந்து விடுமோ என்ற காரணத்தினால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொண்டால் திரைப்படங்களில் நடிக்க முடியாது என திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் ஒரு சில நடிகைகள் மட்டுமே திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகை திருமணலாகி குழந்தை பெற்ற பிறகு கூட நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருவதாகவும் அது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எனவே இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பழனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை காஜல் அகர்வால் இவர் இதனை தொடர்ந்து விஜய், விஷால், சூர்யா, கார்த்தி, அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிட்ச்லு என்ற தொழிலதிபரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் காஜல் அகர்வால் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்பொழுது இவர் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்ப வாழ்க்கை இனிமையாக உள்ளது, குழந்தையை பார்த்துக் கொள்ள அதிக நேரம் ஒதுக்குகிறேன், திருமணத்திற்கு பிறகும் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது; ஏற்கனவே தமிழில் நிறைய படங்கள் நடித்துள்ளேன், தமிழில் நான் மகான் அல்ல படமே எனக்கு முதல் வெற்றி படம் எனக் கூறியுள்ளார்.