Ethirneechal Marimuthu: நடிகர் மாரிமுத்து நேற்று மரணம் அடைந்திருக்கும் நிலையில் இவர் குறித்த ஏராளமான தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அப்படி லியோ திரைப்படத்தில் நடிக்க இருந்தது குறித்து மாரிமுத்து பேட்டியளித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் மாரிமுத்து.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் குணசேகரன் கேரக்டர் தான் தனது சிறந்த வில்லத்தனத்தை பயன்படுத்தி பிரபலமானார் மாரிமுத்து. இதற்கு முன்பு இயக்குனராகவும, நடிகராகவும் பணியாற்றி இருந்தாலும் எதிர்நீச்சல் தான் திருப்புமுனையாக அமைந்தது.
இவ்வாறு பிரபலமான மாரிமுத்து தொடர்ந்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வந்தார் அப்படி சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களுடன் உரையாற்றிய பொழுது சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது, லோகேஷ் கனகராஜ் சார் இப்போது எடுப்பது மாதிரியே சினிமா எடுங்கள் லியோ படத்தில் நடிக்க அழைத்திருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பேன்.
நல்ல சம்பளம் வாங்கி இருப்பேன் கூப்பிடு வாங்க எதிர்பார்த்தேன் கூப்பிடல சூட்டிங் முன்பு வேறு வேறு விஷயங்கள் பேசுவது மாதிரி பேசி லோகேஷிடம் கேட்டேன் நானும் இருக்கேன் சார் என்பதை நினைவூட்ட வேறு விஷயம் பேசுவது போல நடித்து விக்ரம் படத்தில் எல்லாம் நடித்திருக்கிறேன் லியோவில் வாய்ப்பு கொடுங்க என்று சொல்லலாம் என்று நினைத்தேன் அவரும் பேசி வைத்து விட்டார்.
மேலும் காதலில் தோற்றுப் போனால் வாழ்க்கையின் இறுதி காலம் இல்லை அதுக்கு அப்புறம் வாழ்க்கை இருக்கு காதல் தோல்வி அடைந்து விட்டது பொண்ணு தூக்கி எறிந்துவிட்டது என்று நினைக்க கூடாது அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தமல்ல எனக்கு பிடித்த வாசகம் ‘தடைகளை படிக்கல்லாக்கு: காதல் தோல்வி என்பது எல்லாம் எண்டே கிடையாது.
வாழ்க்கையில் நிறைய இன்பம், சந்தோஷம் இருக்கு அதை அனுபவிக்கணும், தோல்வி அடைந்தால் சரக்கு அடிக்கிறது, வீட்டுக்குள் இருப்பது தவறு உன் முன்னாடி முன்னேறி காட்டுறேன் என வளர வேண்டும் நான் வீட்டில் ரொம்ப கூலான ஆள். ஆதி குணசேகரன் ஒரு கதாபாத்திரம். வீட்டில் நான் ரொம்ப கூலா லவ்லியா தான் இருப்பேன் மாரிமுத்து வீட்டில் யாரையும் அதட்டிப் பேச மாட்டான். இப்போதுள்ள இளம் பெண்களுக்கு தமிழ் புத்தகங்கள் வாங்கி தரலாம் என்று நினைக்கிறேன்.
இப்போதுள்ள பெண்களுக்கு தமிழ் தெரியவில்லை தமிழ் மொழிக்கு தான் நயம் உண்டு தமிழை நன்கு உச்சரித்தாலே நன்றாக இருக்கும் தமிழ் மாதங்களே இப்போது உள்ள கல்லூரி மாணவிகளுக்கு தெரியவில்லை. தமிழ் நூல்களை அவர்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். ஆதி குணசேகரன் என்கின்ற கதாபாத்திரத்தை கெட்டவனாக நான் வடிவமைத்தோம் அந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் திட்டுவார்கள் என்றால் அந்த கதாபாத்திரம் சரியாகி இருக்கிறது என்று அர்த்தம்.
அந்த சீரியல் ஆரம்பித்து 200 எபிசோடு வரை தான் என்னை திட்டினார்கள் இப்போது என்னை ஹீரோவாகிவிட்டார்கள் அதுதான் எனக்கு ஆச்சரியமாய் இருக்கு அந்த அளவுக்கு ரசிக்கிறாங்க திட்டுவது நல்லது திட்டினால்தான் அந்த கதாபாத்திரம் சரி என அந்த பேட்டியில் மாரிமுத்து கூறியிருந்தார்.