காலேஜில் 43 அரியர்… கவிதை எழுதியே அந்த பெண்ணை கரெக்ட் பண்ணினேன்… மாரிமுத்துவின் மறுபக்கம்

marimuthu
marimuthu

Ethirneechal Marimuthu: எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து கடிதத்தின் மூலம் காதல் வளர்த்திருக்கிறார் இது குறித்து தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வசந்த், மணிரத்தினம், எஸ்.ஜே சூர்யா, ராஜ்கிரன், சீமான் உள்ளிட்ட ஏராளமான இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

அப்படி வைரமுத்துவிடம் தான் முதலில் உதவி இயக்குனராக பணியாற்ற ஆரம்பித்தார். அதன் பிறகு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கினார் ஆனால் சொல்லும் அளவிற்கு இந்த படம் வெற்றினை பெறாத காரணத்தினால் நடிக்க ஆரம்பித்தார். அப்படி பரியேறும் பெருமாள் படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இதில் இவருடைய கேரக்டர் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது இயக்குனராக பணியாற்றும் பொழுது கிடைக்காத புகழ் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் கிடைத்தது. இப்படி இதன் மூலம் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். மேலும் இந்தியன் 2, கங்குவா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

பொதுவாக மாரிமுத்து கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் உடையவர் அப்படி அவர் எழுதிய கவிதைதான் ‘ஆளை தூக்கும் ஆடி ஆற்றில் வெட்ட வெளியில் நின்று கொண்டு கடைசி குச்சியில் சிகரட்டை பற்ற வைக்கும் பொழுது இருக்கும் எச்சரிக்கை உணர்வு எனது வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதைகளிலும் இருந்திருக்கலாம்’ என்பதுதான் அந்த கவிதையை ஒரு பேட்டியில் இதனைக் கூறிய பிறகு தான் தெரிந்தது அவருக்குள் ஒரு கவிஞர் இருக்கிறார் என்று.

எனவே கவிதையின் மூலம் காதலை வளர்த்தார் அதாவது மாரிமுத்து பேட்டி ஒன்றில் கூறியதாவது, கடிதத்தில் கவிதைகள் எழுதி ஒரு பெண்ணுடன் எனக்கு காதல் ஏற்பட்டது அந்த பெண்ணின் சொந்த ஊர் குற்றாலம் அப்போது நான் சிவகாசி பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன் ஒரு கட்டத்தில் இரண்டு பேருக்கும் காதல் உருவானது. உறுதியானதும் அந்தப் பெண்ணை பார்ப்பதற்காக குற்றாலத்திற்கு சென்று விட்டேன். ஆனால் அவர் சொன்ன முகவரியில் சென்று பார்க்கும் பொழுது அந்த பெண் அங்கு இல்லை.

உடனே அக்கம் பக்கத்தினாரிடம் விசாரித்தேன் அதற்கு அவர்கள் குடும்பத்தோடு ஊரை காலி செய்து விட்டார்கள் எங்கு சென்றிருக்கிறார்கள் என்பது கூட எங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். அந்த பொறியை வைத்து தான் என்னுடைய முதல் படமான கண்ணும் கண்ணும் படத்தை இயக்கினேன் என்றார். மேலும் இந்த பேட்டியில் அவர், முதல் மரியாதை படத்தை பார்த்த பிறகு தான் எனக்கு சினிமா மீதான ஆசை பிறந்தது. அதனையடுத்து நமக்கு இன்ஜினியரிங் படிப்பு செட் ஆகுது என முடிவு செய்துவிட்டேன். அதனால் ஒழுங்காக படிக்கவும் இல்லை இதுவரையிலும் எனக்கு 43 அரியர்ஸ் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.