Actress Silk Smitha: விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் வருகின்ற 15ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இதனை அடுத்து சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் பட்டையை கிளப்பி வருகிறது.
மார்க் ஆண்டனி படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் நிலையில் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அந்த வகையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இதனை ஒரு கோடி பார்வையாளர்களுக்கு மேல் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ட்ரெய்லரில் ஆச்சரியப்படும் வகையில் சில்க் ஸ்மிதாவின் தோற்றம் அமைந்தது. எனவே இதனால் ஷாக்கான ரசிகர்கள் சில்க் ஸ்மிதா மறைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் எப்படி இந்த படத்தில் சில்க் ஸ்மிதாவை கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எனவே இதற்கான பதில் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா போல் நடித்தவர் இன்ஸ்டாகிராம் மாடல் நடிகை விஷ்ணு பிரியா காந்தி என்று தெரியவந்துள்ளது. இந்த படத்தில் இவரை நடிக்க வைத்து சில கிராபிக்ஸ் மூலம் முக அமைப்பை மாற்றி உள்ளதாகவும் அதனால்தான் இந்த படத்தில் அச்சு அசல் சில்க் ஸ்மிதாவே நடித்தது போல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே இது குறித்து மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவை போல் நடித்த விஷ்ணு பிரியா காந்தி சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்று இருக்கு பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த படத்தில் சில்க் ஸ்மிதா தோன்றும் காட்சிகள் நிச்சயமாக 90s-களை மிகப்பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.