சன் தொலைக்காட்சி என்றாலே சீரியலுக்கு மிகவும் பெயர் போன தொலைக்காட்சி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் டிஆர்பிஇல் நல்ல ரேட்டிங் பிடித்து வருகிறது அந்த வகையில் சண் தொலைக்காட்சியில் இனியா என்ற சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது.
ஆலியா மானசா ரிஷி ராஜ் ஆகியோர்கள் இந்த தொடரில் முக்கிய ரோலில் நடித்து வந்தார்கள். டிஆர்பிலும் நல்ல ரேட்டிங் பிடித்து வந்த இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது இந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடந்து முடிந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
விரைவில் கிளைமேக்ஸ் காட்சிகள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருக்கிறது கடைசி நாள் சூட்டிங் என்பதால் சீரியல் குழுவினர் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.