கே ஜி எஃப் டீசரில் அதிரடியாக அந்த காட்சியை நீக்க சொல்லி போர்க்கொடி தூக்கும் பாதுகாப்பு தடுப்பு பிரிவு.? யாஷுக்கு வந்த சோதனை.?

yaash

தமிழ் திரையுலகில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எஃப் என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்தது.

மேலும் கே ஜி எஃப்2 இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்கள் இயக்கி இந்த படத்திற்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்து மிரட்டியுள்ளார்.

சமீபத்தில் யாஸ் பிறந்தநாள் முன்னிட்டு படக்குழுவினர்கள் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் டீசரை ரசிகர்களுக்கு சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார்கள்.வெளி வந்த நாளிலிருந்தே 145 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து மாபெரும் சாதனை படைத்தது கே ஜி எஃப் 2 படத்தின் டீஸர்.

இந்நிலையில் இந்த டீசரில் யாஷின் புகை பிடிக்கும் காட்சிகளை நீக்குமாறு ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் கர்நாடகா மாநில புகையிலை தடுப்பு பிரிவு படக்குழு கடிதம் அனுப்பி  உள்ளதாம் மேலும் அதில் சிகரெட் புகைப்பிடிப்பதை காட்டும் காட்சிகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளதாம் அதனால் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் பிரிவு 5யை மீறியுள்ளதாம் COTPA 2003 இன் படி சமூக வலைதள பக்கங்களில் இருந்து இந்த டீசரை உடனடியாக நீக்குமாறு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவரொட்டிகளில் புகைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருந்த போஸ்டர்களையும் அகற்றும் எனவும் தடுப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளதாம்.

இதையடுத்து இந்த தகவல் தற்போது யாஷ் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.