Actress Marriage: பொதுவாக இந்தியாவைப் பொறுத்தவரை திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடப்பது வழக்கம் அதுவும் முக்கியமாக திரை நட்சத்திரங்கள் திருமணம் என்றால் அதனை பிரமாண்டமாக திருவிழா போல் நடத்தி வருகின்றனர். அப்படி நடிகைகள் தங்கள் திருமண உடைக்காக எத்தனை லட்சம் செலவழித்துள்ளார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய் பச்சன்: நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் திருமணம் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்திருந்த ஆடைகளின் மதிப்பு ரூ.75 லட்சமாம். நீதா லுல்லா என்ற ஆடை வடிவமைப்பாளர் பாரம்பரிய காஞ்சிபுரம் புடவையில் அழகான தங்க பார்டர், படிகங்கள் மற்றும் உண்மையான தங்கத்தின் நூல் வேலைப்பாடு ஆகியவற்றை வைத்து உருவாக்கியுள்ளார்.
ஷில்பா ஷெட்டி: நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா இருவரும் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுடைய திருமணம் நடைபெற்று 10 வருடங்களை கடந்திருக்கும் நிலையில் ஷில்பா தருண் தஹிலியானி வடிவமைத்த பாரம்பரிய சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். அதில் 8000 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதிக்கப்பட்டிருந்தது இவ்வாறு இந்த உடையின் விலை 50 லட்சமாம்.
அனுஷ்கா வர்மா: நடிகை அனுஷ்கா வர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இருவரும் காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அனுஷ்கா திருமணத்தில் லெஹாங்கா அணிந்து இளவரசி போல் காட்சி அளித்த நிலையில் இவருடைய திருமண உடையின் மதிப்பு ரூபாய் 30 லட்சம் என கூறப்படுகிறது.
பிரியங்கா சோப்ரா: நடிகை பிரியங்கா சோப்ரா பாடகர் நிக் ஜோன்ஸ் இருவரும் கிறிஸ்துவ கலாச்சார முறைப்படி இரண்டு முறை திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுடைய திருமணம் கடந்த 18ஆம் ஆண்டு நடைபெற்றது இந்த திருமணத்தின் இரவில் நடிகை பிரியங்கா சோப்ரா சித்தூர் சிவப்பு நிற லெஹாங்கா அணிந்தார் இதன் விலை சுமார் 13 லட்சம்.
தீபிகா படுகோன்: தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இத்தாலியில் லேக் கோம்போவில் திருமணம் செய்துக் கொண்டனர். சிந்தி மற்றும் கொங்கனி முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில் சிந்தி முறை திருமணத்திற்காக தீபிகா படுகோன் அணிந்திருந்த லஹாங்கா விலை சுமார் 13 லட்சம்.
ஆலியா பட்: ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது இந்த திருமணத்தில் ஆலியா பட் புடவை அணிந்திருந்தார் இவருடைய புலவையின் விலை ரூபாய் 50 லட்சம் என கூறப்படுகிறது.
சோனம் கபூர்: சோனம் கபூர் அனுராதா வக்கீல் என்பவர் வடிவமைத்த லெஹாங்காவை அணிந்திருந்தார். இந்த புடவையின் விலை சுமார் ரூபாய் 70 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
கத்ரீனா கைஃப்: கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் திருமணத்தில் அனைவர் கவனத்தையும் கத்ரீனாவின் திருமண உடை ஈர்த்தது இதனுடைய விலை ரூபாய் 17 லட்சம்.
நயன்தாரா: கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. நயன்தாராவின் திருமண உடை பலரையும் கவர்ந்த நிலையில் இவருடைய உடை ரூபாய் 25 லட்சம் இருக்குமாம்.