10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டு எழும் இந்திய சினிமா.. எகிறும் பாக்ஸ் ஆபிஸ்.! கெத்து காட்டும் ரஜினி

indian cinema
indian cinema

Movies Box Office: கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் பாக்ஸ் ஆபீஸ் எகிறி இருப்பதாகவும், எந்தெந்த படங்கள் எவ்வளவு வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாக இருக்கும் நிலையில் இந்திய சினிமா மகிழ்ச்சியில் உள்ளது.

அதாவது ஜூலை மாதத்தில் பாக்ஸ் ஆபீஸ் அளவு ரூ.953 கோடியாக இருந்தது. இதனை அடுத்து ஆகஸ்டில் ரூ.1610 கோடியாக உச்சமடைந்து செப்டம்பரில் 1353 கோடியாக குறைந்து இருப்பதாக Oxmax Media மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் கூட்டமைப்பு சங்கம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றனர்.

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் லியோ படம்.. தமிழகத்தில் மட்டும் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

செப்டம்பர் காலாண்டில் மொத்த வசூல் அளவு ரூ.3895 கோடியாக உயர்ந்துள்ளது எனவே இதனால் இந்திய சினிமாத்துறை மீண்டு எழுவதை காண முடிகிறது. ஆகஸ்ட் 11 முதல் 13 வரையிலான வார இறுதி விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் மொத்தம் 2.1 கோடி பேர் திரையரங்கங்களில் படம் பார்த்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச அளவு என்பது குறிப்பிடத்தக்காது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 390 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. ஹிந்தி படங்களில் முதலிடத்தை பெற்றுள்ள கத்தார் 2 ரூபாய் 620 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 617 கோடி ரூபாய்வுடன் இரண்டாவது இடத்தில் இயக்குனர் அட்லீ-ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் படம் ரூ.617 கோடி வசூலை செய்துள்ளது.

குத்துன்னா இப்படி குத்தனும்.. கீர்த்தி சுரேஷுடன் ஆட்டம் போட்ட கௌதம் வாசுதேவ் மேனன்.. வைரலாகும் வீடியோ.!

மேலும் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படம் ரூ. 176 கோடி ரூபாய் படம் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதனை அடுத்து பிராந்திய மொழி படங்களில் 393 கோடி ரூபாயுடன் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 92 ரூபாய் வசூலுடன் தெலுங்கு படமான ப்ரோ இரண்டாவது இடத்திலும், 90 கோடி ரூபாயுடன் மராத்தி படமான Baipan Bhari Deva மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

ஆங்கில படங்களில் ரூபாய் 158 கோடி ரூபாய் வசூல் உடன் முதல் இடத்தை ஓபன் ஹேமர் பெற்றுள்ளது. 133 கோடி ரூபாய் உடன் MI டெட் ரெக்கானிங்- 1 இரண்டாவது இடத்தினையும், ரூ.54 கோடி வசூலுடன் பார்பி படம் மூன்றாவது இடத்தில் உள்ளது.